Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:84 — பெண்கள்

கடவுள்-ன் நிமித்தம் நீங்கள் சண்டையிட வேண்டும். உங்களுடைய சொந்த ஆன்மாவிற்கு மட்டுமே நீங்கள் பொறுப்பாளியாவீர்கள். மேலும் நம்பிக்கையாளர்களையும் இவ்வாறே செய்யும்படி உபதேசிப்பீராக. நம்பமறுப்பவர்களின் ஆற்றலைக் கடவுள் கட்டுப்படுத்தி விடுவார். கடவுள் மிக அதிகமான ஆற்றலும், மேலும் மிக அதிகமான வல்லமையும் உடையவர்.

[4:83] பாதுகாப்பை பாதிக்கும் ஒரு வதந்தி அவர் களுடைய வழியில் வரும்போது அதை அவர்கள் பரப்பி விடுகின்றார்கள். அதை அவர்கள் தூதரி டமும் மேலும் அவர்களில் அதிகாரம் பெற்றவர் களிடமும் ஆலோசனை செய்திருந்தால், இந்த விஷயங்களை புரிந்து கொள்பவர்கள் அவர்களுக்கு தெரிவித்திருப்பார்கள். கடவுள்-உடைய அருளும் மேலும் அவருடைய கருணை யும் உங்கள் பால் இல்லாதிருந்திருக்கு மேயானால், ஒரு சிலரைத் தவிர, நீங்கள் சாத்தானை பின்பற்றியிருப்பீர்கள்.

[4:85] எவரொருவர் ஒரு நல்ல செயலுக்கு மத்தியஸ்தம் செய்கின்றாரோ அவர் அதனுடைய நன்மையில் ஒரு பங்கைப் பெறுவார். மேலும் எவரொருவர் ஒரு கெட்ட செயலுக்கு மத்தியஸ்தம் செய்கின்றாரோ அவர் அதனுடைய ஒரு பங்கிற்கு உள்ளாக்கப் படுவார். கடவுள் எல்லா விஷயங்களையும் கட்டுப்படுத்துகின்றார்.