குர்ஆன் 4:85 — பெண்கள்
எவரொருவர் ஒரு நல்ல செயலுக்கு மத்தியஸ்தம் செய்கின்றாரோ அவர் அதனுடைய நன்மையில் ஒரு பங்கைப் பெறுவார். மேலும் எவரொருவர் ஒரு கெட்ட செயலுக்கு மத்தியஸ்தம் செய்கின்றாரோ அவர் அதனுடைய ஒரு பங்கிற்கு உள்ளாக்கப் படுவார். கடவுள் எல்லா விஷயங்களையும் கட்டுப்படுத்துகின்றார்.
[4:84] கடவுள்-ன் நிமித்தம் நீங்கள் சண்டையிட வேண்டும். உங்களுடைய சொந்த ஆன்மாவிற்கு மட்டுமே நீங்கள் பொறுப்பாளியாவீர்கள். மேலும் நம்பிக்கையாளர்களையும் இவ்வாறே செய்யும்படி உபதேசிப்பீராக. நம்பமறுப்பவர்களின் ஆற்றலைக் கடவுள் கட்டுப்படுத்தி விடுவார். கடவுள் மிக அதிகமான ஆற்றலும், மேலும் மிக அதிகமான வல்லமையும் உடையவர்.
[4:86] ஒரு வாழ்த்துரை கொண்டு வாழ்த்தும் போது நீங்கள் அதை விட சிறந்த வாழ்த்துரை கொண்டு, அல்லது குறைந்தபட்சம் அதே போன்ற ஒன்றை கொண்டு பதில் அளிக்க வேண்டும். கடவுள் எல்லா விஷயங்களையும் கணக்கெடுக்கின்றார்.