குர்ஆன் 4:86 — பெண்கள்
ஒரு வாழ்த்துரை கொண்டு வாழ்த்தும் போது நீங்கள் அதை விட சிறந்த வாழ்த்துரை கொண்டு, அல்லது குறைந்தபட்சம் அதே போன்ற ஒன்றை கொண்டு பதில் அளிக்க வேண்டும். கடவுள் எல்லா விஷயங்களையும் கணக்கெடுக்கின்றார்.
[4:85] எவரொருவர் ஒரு நல்ல செயலுக்கு மத்தியஸ்தம் செய்கின்றாரோ அவர் அதனுடைய நன்மையில் ஒரு பங்கைப் பெறுவார். மேலும் எவரொருவர் ஒரு கெட்ட செயலுக்கு மத்தியஸ்தம் செய்கின்றாரோ அவர் அதனுடைய ஒரு பங்கிற்கு உள்ளாக்கப் படுவார். கடவுள் எல்லா விஷயங்களையும் கட்டுப்படுத்துகின்றார்.
[4:87] கடவுள் : அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை. அவர், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் நிச்சயமாக உங்களை ஒன்று கூட்டுவார்-அந்த நாள் தவிர்க்க இயலாத நாள். கடவுள்-உடைய விவரிப்பைக் காட்டிலும் எவருடையது அதிக உண்மை நிறைந்தது?