Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:82 — பெண்கள்

அவர்கள் குர்ஆனை ஏன் மிகவும் கவனத்துடன் ஆராய்வதில்லை? கடவுள்-ஐத் தவிர வேறு யாரிடமிருந்தும் இது வந்திருந்தால் இதில் அவர்கள் எண்ணற்ற முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.*

[4:81] அவர்கள் கீழ்படிவதாக வாக்குறுதி அளிக்கின் றார்கள், ஆனால் அவர்கள் உங்களை விட்டு விலகியவுடன், அவர்களில் சிலர் அவர்கள் கூறிய தற்கு மாறான எண்ணங்களுக்கு இடமளிக்கின் றார்கள். அவர்களின் ஆழ் மனதின் எண்ணங் களையும் கடவுள் பதிவு செய்கின்றார். அவர்களை நீங்கள் புறக்கணித்து விடுங்கள், மேலும் உங்களுடைய உறுதியான நம்பிக்கையை கடவுள் மீது வைப்பீராக. ஓர் ஆதரவாளராக இருக்க கடவுள் போதுமானவர்.

[4:83] பாதுகாப்பை பாதிக்கும் ஒரு வதந்தி அவர் களுடைய வழியில் வரும்போது அதை அவர்கள் பரப்பி விடுகின்றார்கள். அதை அவர்கள் தூதரி டமும் மேலும் அவர்களில் அதிகாரம் பெற்றவர் களிடமும் ஆலோசனை செய்திருந்தால், இந்த விஷயங்களை புரிந்து கொள்பவர்கள் அவர்களுக்கு தெரிவித்திருப்பார்கள். கடவுள்-உடைய அருளும் மேலும் அவருடைய கருணை யும் உங்கள் பால் இல்லாதிருந்திருக்கு மேயானால், ஒரு சிலரைத் தவிர, நீங்கள் சாத்தானை பின்பற்றியிருப்பீர்கள்.