குர்ஆன் 4:93 — பெண்கள்
எவர் ஒருவர் வேண்டுமென்றே ஒரு நம்பிக்கை யாளரைக் கொலை செய்து விடுகின்றாரோ, அவருக்குத் தண்டனை நரகமேயாகும், அதில் அவர் என்றென்றும் தங்கியிருப்பார், கடவுள் அவர் மீது கோபம் கொள்கின்றார், மேலும் அவரைக் கண்டனம் செய்கின்றார், மேலும் அவருக்கு ஒரு பயங்கரமான தண்டனையை தயார் செய்து வைத்திருக்கின்றார்.
[4:92] ஒரு விபத்தாக இருந்தாலன்றி ஒரு நம்பிக் கையாளர், மற்றொரு நம்பிக்கையாளரை கொலை செய்யக் கூடாது. ஒருவர் எதிர்பாராத விதமாக ஒரு நம்பிக்கையாளரைக் கொலை செய்து விட்டால், அவர் ஒரு நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்வது கொண்டும், மேலும் பலியானவரின் குடும்பத்தார் தாமாக ஈட்டுத்தொகையை தர்மமாக விட்டுக் கொடுத் தாலன்றி, பலியானவரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு கொடுத்தும் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். பலியானவர் ஒரு நம்பிக்கையாளராக இருந்து உங்களோடு போர்புரியும் மக்களைச் சார்ந்தவராக இருந்தாலும், ஒரு நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்வது கொண்டு பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். அவர் நீங்கள் சமாதான உடன்படிக்கை செய்து கொண்ட மக்களைச் சார்ந்தவராக இருந்தால், நீங்கள் ஒரு நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்வதோடு கூடுதலாக நஷ்ட ஈடும் கொடுத்து பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். விடுதலை செய் வதற்கு ஒரு அடிமையை நீங்கள் காணா விட்டால்,* கடவுள்-ஆல் மீட்டுக் கொள்ளப் படுவதற்காக நீங்கள் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு இருந்து பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். கடவுள் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.
[4:94] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்-ன் பாதையில் தாக்கினால், நீங்கள் முற்றிலும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களிடம் ஒருவர் சமாதானத்தைக் கோரினால் இந்த உலகத்தின் வெகுமதிகளைத் தேடியவர்களாக, “நீர் ஒரு நம்பிக்கையாளர் அல்ல” என்று கூறாதீர்கள். ஏனெனில் கடவுள் எண்ணற்ற வெகுமதிகளைக் கொண்டவராக இருக்கின்றார். நீங்களும் அவர்களைப் போன்றேதான் இருந்தீர்கள் மேலும் கடவுள் உங்களுக்கு அருள்புரிந்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் (தாக்குவதற்கு முன்னால்) முற்றிலும் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.