Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:92 — பெண்கள்

ஒரு விபத்தாக இருந்தாலன்றி ஒரு நம்பிக் கையாளர், மற்றொரு நம்பிக்கையாளரை கொலை செய்யக் கூடாது. ஒருவர் எதிர்பாராத விதமாக ஒரு நம்பிக்கையாளரைக் கொலை செய்து விட்டால், அவர் ஒரு நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்வது கொண்டும், மேலும் பலியானவரின் குடும்பத்தார் தாமாக ஈட்டுத்தொகையை தர்மமாக விட்டுக் கொடுத் தாலன்றி, பலியானவரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு கொடுத்தும் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். பலியானவர் ஒரு நம்பிக்கையாளராக இருந்து உங்களோடு போர்புரியும் மக்களைச் சார்ந்தவராக இருந்தாலும், ஒரு நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்வது கொண்டு பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். அவர் நீங்கள் சமாதான உடன்படிக்கை செய்து கொண்ட மக்களைச் சார்ந்தவராக இருந்தால், நீங்கள் ஒரு நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்வதோடு கூடுதலாக நஷ்ட ஈடும் கொடுத்து பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். விடுதலை செய் வதற்கு ஒரு அடிமையை நீங்கள் காணா விட்டால்,* கடவுள்-ஆல் மீட்டுக் கொள்ளப் படுவதற்காக நீங்கள் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு இருந்து பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். கடவுள் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.

[4:91] உங்களுடனும் மேலும் அவர்களுடைய மக்களு டனும் சமாதானம் செய்து கொள்ள விரும்பும் மற்றவர்களையும் நீங்கள் காண்பீர்கள். ஆயினும் போர் ஆரம்பித்த உடன் உங்களுக்கு எதிராக அவர்கள் சண்டையிடுவார்கள். இந்த மக்கள் உங்களை விட்டு விட்டு, உங்களுடன் சமாதானம் செய்ய முன்வந்து மேலும் உங்களுடன் சண்டையிடுவதை நிறுத்திக் கொள்ளாத வரை அவர்களை நீங்கள் சந்திக்கும் போது அவர்களுடன் சண்டையிடலாம். இவர்களுக் கெதிராக நாம் உங்களுக்கொரு தெளிவான அதிகாரம் அளிக்கின்றோம்.

[4:93] எவர் ஒருவர் வேண்டுமென்றே ஒரு நம்பிக்கை யாளரைக் கொலை செய்து விடுகின்றாரோ, அவருக்குத் தண்டனை நரகமேயாகும், அதில் அவர் என்றென்றும் தங்கியிருப்பார், கடவுள் அவர் மீது கோபம் கொள்கின்றார், மேலும் அவரைக் கண்டனம் செய்கின்றார், மேலும் அவருக்கு ஒரு பயங்கரமான தண்டனையை தயார் செய்து வைத்திருக்கின்றார்.