குர்ஆன் 40:13 — மன்னிப்பவர்
அவர்தான் தன்னுடைய சான்றுகளைத் தொடர்ச்சியாக உங்களுக்குக் காட்டுபவர், மேலும் விண்ணிலிருந்து வாழ்வாதாரங்களை இறக்கி அனுப்புபவர். முற்றிலும் அடிபணிந் தவர்கள் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளும் திறன் பெற்றிருப்பார்கள்.
[40:12] இது ஏனெனில் கடவுள் மட்டும் என்று வாதிட்ட போது, நீங்கள் நம்பமறுத்தீர்கள், ஆனால் அவருடன் மற்றவர்களும் சேர்த்து கூறப்பட்ட போது நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள். ஆகையால், கடவுள்-ன் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது, அவர் மிகவும் உயர்ந்தவர், மிகவும் சிறந்தவர்.
[40:14] ஆகையால், நம்பமறுப்பவர்கள் அதனை விரும்பாத போதிலும், உங்களுடைய வழிபாட்டை நீங்கள் முற்றிலும் கடவுள்-க்கு மட்டுமே அர்ப்பணிக்க வேண்டும்.