குர்ஆன் 40:4 — மன்னிப்பவர்
நம்பமறுப்பவர்களைத் தவிர எவரும் கடவுள்-ன் வெளிப்பாடுகளுக்கு எதிராக வாதாட மாட்டார்கள். அவர்களுடைய வெளிப்ப டையான வெற்றியால் கவரப்பட்டு விடாதீர்.
[40:3] பாவங்களை மன்னிப்பவர், வருந்தித்திருந் துதலை ஏற்றுக் கொள்பவர், தண்டனையை நிறை வேற்றுவதில் கண்டிப்பானவர், மேலும் அனைத்து அதிகாரங்களும் கொண்டவர். அவருடன் வேறு தெய்வம் இல்லை. இறுதி விதி அவரிடமே உள்ளது.
[40:5] அவர்களுக்கு முன்னர் நோவாவின் சமூகத் தாரும், அவர்களுக்குப் பின்னர் ஏராளமான எதிரிகளும் நம்ப மறுத்தனர். ஒவ்வொரு சமூகமும் அவர்களுடைய தூதரை அவரை இயங்காமல் செய்யும் பொருட்டு, அடக்கு முறை செய்தன. மேலும் சத்தியத்தைத் தோல்வியுறச் செய்வதற்காக அவர்கள் பொய்மையைக் கொண்டு வாதிட்டனர். அதன் விளைவாக, நான் அவர்களைத் தண்டித்தேன்; எனது தண்டனை எவ்வளவு கடுமையானதாக இருந்தது!