குர்ஆன் 40:64 — மன்னிப்பவர்
கடவுள் தான் பூமியை உங்களுக்கு வசிக்கத் தக்கதாகவும், மேலும் வானத்தை வலி மைமிக்கதொரு அமைப்பாகவும் ஆக்கினார், மேலும் அவர் உங்களை வடிவமைத்தார், மேலும் உங்களை நன்கு வடிவமைத்தார். அவர்தான் நல்ல வாழ்வாதாரங்களை* உங்களுக்கு வழங்குகின்றவர். உங்கள் இரட்சகரான கடவுள் இவ்விதமானவர்; கடவுள் மிகவும் உயர் வானவர், பிரபஞ்சத்தின் இரட்சகர்.
[40:63] கடவுள்-ன் வெளிப்பாடுகளை அலட்சியம் செய்பவர்களே வழிதவறிச் செல்வபவர்களாக இருக்கின்றனர்.
[40:65] அவர் உயிருடனிருப்பவர்: அவரைத் தவிர தெய்வம் இல்லை. நீங்கள் உங்களுடைய மார்க்கத்தை முற்றிலும் அவருக்கு மட்டுமே அர்ப்பணித்துக் கொண்டவர்களாக, அவரை மட்டுமே வழிபட வேண்டும். பிரபஞ்சத்தின் இரட்சகராகிய, கடவுள்-க்கே புகழ் அனைத்தும்.