Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:65 — மன்னிப்பவர்

அவர் உயிருடனிருப்பவர்: அவரைத் தவிர தெய்வம் இல்லை. நீங்கள் உங்களுடைய மார்க்கத்தை முற்றிலும் அவருக்கு மட்டுமே அர்ப்பணித்துக் கொண்டவர்களாக, அவரை மட்டுமே வழிபட வேண்டும். பிரபஞ்சத்தின் இரட்சகராகிய, கடவுள்-க்கே புகழ் அனைத்தும்.

[40:64] கடவுள் தான் பூமியை உங்களுக்கு வசிக்கத் தக்கதாகவும், மேலும் வானத்தை வலி மைமிக்கதொரு அமைப்பாகவும் ஆக்கினார், மேலும் அவர் உங்களை வடிவமைத்தார், மேலும் உங்களை நன்கு வடிவமைத்தார். அவர்தான் நல்ல வாழ்வாதாரங்களை* உங்களுக்கு வழங்குகின்றவர். உங்கள் இரட்சகரான கடவுள் இவ்விதமானவர்; கடவுள் மிகவும் உயர் வானவர், பிரபஞ்சத்தின் இரட்சகர்.

[40:66] “என் இரட்சகரிடமிருந்து தெளிவான வெளிப்பாடுகள் என்னிடம் வந்த பொழுது, கடவுள்-உடன் நீங்கள் வழிபடுகின்ற இணைத் தெய்வங்களை வழிபடுவதிலிருந்து நான் தடுக்கப்பட்டுள்ளேன். பிரபஞ்சத்தின் இரட்சகருக்கு அடிபணிய வேண்டுமென நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்”*என்று கூறுவீராக.