Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:66 — மன்னிப்பவர்

“என் இரட்சகரிடமிருந்து தெளிவான வெளிப்பாடுகள் என்னிடம் வந்த பொழுது, கடவுள்-உடன் நீங்கள் வழிபடுகின்ற இணைத் தெய்வங்களை வழிபடுவதிலிருந்து நான் தடுக்கப்பட்டுள்ளேன். பிரபஞ்சத்தின் இரட்சகருக்கு அடிபணிய வேண்டுமென நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்”*என்று கூறுவீராக.

[40:65] அவர் உயிருடனிருப்பவர்: அவரைத் தவிர தெய்வம் இல்லை. நீங்கள் உங்களுடைய மார்க்கத்தை முற்றிலும் அவருக்கு மட்டுமே அர்ப்பணித்துக் கொண்டவர்களாக, அவரை மட்டுமே வழிபட வேண்டும். பிரபஞ்சத்தின் இரட்சகராகிய, கடவுள்-க்கே புகழ் அனைத்தும்.

[40:67] அவர்தான் உங்களைத் தூசியிலிருந்து, மேலும் அதனைத் தொடர்ந்து மிகச் சிறியதொரு துளியிலிருந்து, பின்னர் தொங்குகின்றதொரு கருவிலிருந்து படைத்தார், பின்னர் ஒரு குழந்தையாக உங்களை வெளிக் கொண்டு வருகின்றார், பின்னர் உங்களை முதிர்ச்சி யடைய விடுகின்றார், பின்னர் நீங்கள் வயதானவர்களாகின்றீர்கள்-உங்களில் சிலர் சீக்கிரத்திலேயே மரணித்து விடுகின்றீர்கள். நீங்கள் புரிந்து கொள்ளும் பொருட்டு, முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு வயதை நீங்கள் அடைகின்றீர்கள்.