குர்ஆன் 40:83 — மன்னிப்பவர்
அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்ற பொழுது, அவர்கள் பாரம்பர்யமாகப் பெற்ற அறிவில் அவர்கள் மகிழ்ந்திருந்தனர், மேலும் அவர்கள் கேலி செய்து கொண்டிருந்த அதே விஷயங்கள் அவர்களுடைய வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தன.
[40:82] அவர்கள் பூமியைச் சுற்றிப் பார்த்து தங்களுக்கு முன்சென்றவர்களுக்கு நேரிட்ட விளைவு களைக் கவனிக்கவில்லையா? அவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்களாகவும், வலிமை மிகுந்தவர்களாகவும், மேலும் பூமியின் மீது அதிகமான பரம்பரைச் சொத்துக்களைப் பெற்றவர்களாகவும் இருந்தனர். இருப்பினும், அவர்களுடைய சம்பாத்தியங்கள் அனைத்தும் அவர்களுக்குச் சிறிதளவும் உதவிடவில்லை.
[40:84] அதனைத் தொடர்ந்து, நம் தண்டனையை அவர்கள் கண்டபொழுது, அவர்கள், “ கடவுள் மட்டுமே என்பதில் நாங்கள் இப்போது நம்பிக்கை கொள்கின்றோம், மேலும் நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருந்த இணைத் தெய்வவழிபாட்டை இப்போது நாங்கள் நிராகரிக்கின்றோம்“ என்று கூறினார்கள்.