குர்ஆன் 41:24 — விவரிக்கப்பட்டது
அவர்கள் இருக்கின்ற வழியிலேயே அவர்கள் தொடர்ந்து சென்றால், நரகமே அவர்களுடைய விதியாக இருக்கும், மேலும் அவர்கள் பிழை பொறுக்கக் கோரினாலும், அவர்கள் பிழை பொறுக்கப்பட மாட்டார்கள்.
[41:23] உங்களுடைய இரட்சகரைப் பற்றிய இவ்வகையான நினைப்பு உங்களை வீழ்ந்து விடச் செய்யும், மேலும் பின்னர் நீங்கள் நஷ்டவாளிகள் ஆகிவிடுவீர்கள்.
[41:25] அவர்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் அவர் களுடைய கண்களில் அலங்காரமானதாக ஆக்கும் கூட்டாளிகளை அவர்களுக்கு நாம் நியமிக்கின்றோம். இவ்விதமாக, அவர்கள் முந்திய சமூகங்களின் ஜின்கள் மற்றும் மனிதர்களுக்கு நேர்ந்ததைப் போன்ற அதே விதிக்கு உள்ளாவதில் சென்று முடிவார்கள், அவர்களும் நஷ்டவாளிகளாகவே இருந்தனர்.