குர்ஆன் 42:25 — கலந்தாலோசித்தல்
அவர்தான் தன்னுடைய அடியார்களிடமிருந்து வருந்தித்திருந்துதலை ஏற்றுக் கொள்கின்றவர், மேலும் பாவங்களை மன்னிக்கின்றவர். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் அவர் முற்றிலும்
[42:24] “கடவுள்-ஐப் பற்றிப் பொய்களை அவர் (ரஷாத்)* புனைந்து கொண்டார்!” என்று அவர்கள் கூறுகின்றனரா? கடவுள் நாடி யிருந்தால், உம்முடைய மனம் மீது அவர் முத்திரையிட்டிருக்க இயலும், ஆனால் கடவுள் பொய்மையை அகற்றுவதுடன் தன்னுடைய வார்த்தைகளால் சத்தியத்தை உறுதிப்படுத்து கின்றார். ஆழ்மனதின் எண்ணங்களை அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[42:26] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்கள் தான் அவருக்கு மறுமொழி அளிக்கின்றனர். தன்னுடைய அருட்கொடைகளை அவர்கள் மீது அவர் பொழிவார். நம்பமறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் கடுமையானதொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.