குர்ஆன் 42:5 — கலந்தாலோசித்தல்
அவர்களுக்கு மேலே இருக்கும் வானங்கள், அவர் மீதுள்ள பக்தியின் காரணத்தால் கிட்டத்தட்ட நொறுங்கி விடுகின்றது, மேலும் வானவர்கள் தங்கள் இரட்சகரைப் புகழ்கின்றனர் மற்றும் துதிக்கின்றனர், மேலும் அவர்கள் பூமியில் உள்ளவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கேட்கின் றனர். நிச்சயமாக, கடவுள்தான் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[42:4] வானங்களில் உள்ள ஒவ்வொன்றும், மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் அவருக்குரியது, மேலும் அவர் மிக உயர்ந்தவர், மகத்தானவர்.
[42:6] அவருடன் மற்ற எஜமானர்களை அமைத்துக் கொள்பவர்கள், கடவுள்தான் அவர்களுடைய பொறுப்பாளராக இருக்கின்றார்; நீர் அவர்க ளுடைய வழக்கறிஞர் அல்ல.