Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 42:6 — கலந்தாலோசித்தல்

அவருடன் மற்ற எஜமானர்களை அமைத்துக் கொள்பவர்கள், கடவுள்தான் அவர்களுடைய பொறுப்பாளராக இருக்கின்றார்; நீர் அவர்க ளுடைய வழக்கறிஞர் அல்ல.

[42:5] அவர்களுக்கு மேலே இருக்கும் வானங்கள், அவர் மீதுள்ள பக்தியின் காரணத்தால் கிட்டத்தட்ட நொறுங்கி விடுகின்றது, மேலும் வானவர்கள் தங்கள் இரட்சகரைப் புகழ்கின்றனர் மற்றும் துதிக்கின்றனர், மேலும் அவர்கள் பூமியில் உள்ளவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கேட்கின் றனர். நிச்சயமாக, கடவுள்தான் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[42:7] இவ்விதமாக நாம் முக்கியமான சமூகத்தையும், அதனைச் சுற்றியுள்ள அனைவரையும் எச்சரிப் பதற்காக, மேலும் தவிர்த்து விட முடியாத அந்த ஒன்று கூட்டும் நாளைப் பற்றி எச்சரிப்பதற்காக, அரபியிலானதொரு குர்ஆனை உமக்கு வெளிப்படுத்துகின்றோம். சிலர் சுவனத்தைச் சென்றடைவார்கள், இன்னும் சிலர் நரகத்தை.