குர்ஆன் 42:7 — கலந்தாலோசித்தல்
وَكَذٰلِكَ أَوحَينا إِلَيكَ قُرءانًا عَرَبِيًّا لِتُنذِرَ أُمَّ القُرىٰ وَمَن حَولَها وَتُنذِرَ يَومَ الجَمعِ لا رَيبَ فيهِ ۚ فَريقٌ فِى الجَنَّةِ وَفَريقٌ فِى السَّعيرِ
இவ்விதமாக நாம் முக்கியமான சமூகத்தையும், அதனைச் சுற்றியுள்ள அனைவரையும் எச்சரிப் பதற்காக, மேலும் தவிர்த்து விட முடியாத அந்த ஒன்று கூட்டும் நாளைப் பற்றி எச்சரிப்பதற்காக, அரபியிலானதொரு குர்ஆனை உமக்கு வெளிப்படுத்துகின்றோம். சிலர் சுவனத்தைச் சென்றடைவார்கள், இன்னும் சிலர் நரகத்தை.
[42:6] அவருடன் மற்ற எஜமானர்களை அமைத்துக் கொள்பவர்கள், கடவுள்தான் அவர்களுடைய பொறுப்பாளராக இருக்கின்றார்; நீர் அவர்க ளுடைய வழக்கறிஞர் அல்ல.
[42:8] கடவுள் நாடியிருந்தால், அவர்களை ஒரே சமூகமாக அவர் ஆக்கியிருக்க இயலும். ஆனால் தான் நாடியவர்களை அவர் தன் கருணைக்குள் மீட்டுக் கொள்கின்றார். வரம்பு மீறுபவர்களைப் பொறுத்த வரை, அவர்களுக்கு அதிபதியோ, அன்றி ஓர் உதவியாளரோ கிடையாது.