குர்ஆன் 42:8 — கலந்தாலோசித்தல்
கடவுள் நாடியிருந்தால், அவர்களை ஒரே சமூகமாக அவர் ஆக்கியிருக்க இயலும். ஆனால் தான் நாடியவர்களை அவர் தன் கருணைக்குள் மீட்டுக் கொள்கின்றார். வரம்பு மீறுபவர்களைப் பொறுத்த வரை, அவர்களுக்கு அதிபதியோ, அன்றி ஓர் உதவியாளரோ கிடையாது.
[42:7] இவ்விதமாக நாம் முக்கியமான சமூகத்தையும், அதனைச் சுற்றியுள்ள அனைவரையும் எச்சரிப் பதற்காக, மேலும் தவிர்த்து விட முடியாத அந்த ஒன்று கூட்டும் நாளைப் பற்றி எச்சரிப்பதற்காக, அரபியிலானதொரு குர்ஆனை உமக்கு வெளிப்படுத்துகின்றோம். சிலர் சுவனத்தைச் சென்றடைவார்கள், இன்னும் சிலர் நரகத்தை.
[42:9] அவருடன் வேறு இரட்சகர்களை அவர்கள் கண்டு விட்டனரா? கடவுள் தான் ஒரே இரட்சகரும் மேலும் எஜமானரும் ஆவார். அவர்தான் இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புகின்றார், மேலும் அவர் தான் சர்வ சக்தியுடையவர்.