குர்ஆன் 43:49 — ஆபரணங்கள்
அவர்கள், “மந்திரவாதியே, (இந்தத் தொந்தரவை நிவர்த்திக்க) அவருடன் நீர் ஓர் உடன்படிக்கையைக் கொண்டிருப்பதால், எங்கள் சார்பாக உம்முடைய இரட்சகரை இறைஞ்சிப் பிரார்த்திப்பீராக; பின்னர் நாங்கள் வழிநடத்தப் பட்டவர்களாக இருப்போம்” என்று கூறினார்கள்.
[43:48] அவர்களுக்கு நாம் காட்டிய ஒவ்வொரு அத்தாட்சியும் அதற்கு முந்தியதை விட பெரியதாகவே இருந்தது. ஒரு வேளை அவர்கள் வருந்தித்திருந்தக்கூடும் என்பதற்காகத் தொந்தரவுகளைக் கொண்டு அவர்களை நாம் துன்புறுத்தினோம்.
[43:50] ஆனால் அவர்களுடைய துன்பத்தை நாம் நிவர்த்தி செய்தவுடன், அவர்கள் பழைய நிலைக்கு திரும்பிச் சென்று விட்டனர்.