Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 45:14 — மண்டியிடுதல்

கடவுள்-ன் நாட்களை எதிர்பார்க்காதவர்களை மன்னித்து விடும்படி நம்பிக்கை கொண்டவர் களிடம் கூறுவீராக. ஒவ்வொருவருக்கும் அவர்கள் சம்பாதித்தவற்றிற்காக அவர் முழுமையாகக் கூலி கொடுப்பார்.

[45:13] அவர் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் உங்கள் சேவைக்கெனப் பணித்தார்; அனைத்தும் அவரிடமிருந்தே. சிந்திக்கின்ற மக்களுக்கு இவை சான்றுகளாகும்.

[45:15] நன்னெறியான காரியங்கள் புரிகின்ற எவரா யினும் தன் சொந்த நலனிற்காகவே அவ்வாறு செய்கின்றார், மேலும் தீய செயல்கள் புரிகின்ற எவராயினும் தன் சொந்த கேட்டிற் காகவேஅவ்வாறு செய்கின்றார். உங்களுடைய இரட்சகரிடமே நீங்கள் திரும்புவீர்கள்.