குர்ஆன் 45:33 — மண்டியிடுதல்
அவர்களுடைய செயல்களின் தீமைகள் அவர்களுக்குத் தெளிவாகப் புலப்பட்டு விடும், மேலும் அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த அதே விஷயங்கள் திரும்பி வந்து அவர்களை மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யும்.
[45:32] கடவுள்-ன் வாக்குறுதி சத்தியம்தான் எனவும், (தீர்ப்பின்) அந்த நேரம் தவிர்த்து விட முடியாதது எனவும் பிரகடனம் செய்யப்பட்ட போது, நீங்கள், “அந்த நேரம் என்றால் என்ன என்பதை நாங்கள் அறிய மாட்டோம்! அதனைப் பற்றி நாங்கள் முற்றிலும் அனுமானத்துடனேயே இருக்கின்றோம்; நாங்கள் உறுதியுடையவர்களாக இல்லை” என்று கூறினீர்கள்.
[45:34] இவ்வாறு பிரகடனம் செய்யப்படும் : “இந்த நாளின் சந்திப்பை நீங்கள் மறந்ததைப் போன்ற அதே விதமாக, இன்றைய தினம் நாம் உங்களை மறந்து விடுகின்றோம். நரக நெருப்புதான் உங்களுடைய தங்குமிடமாகும், மேலும் உங்களுக்கு உதவியாளர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.