குர்ஆன் 45:9 — மண்டியிடுதல்
நம்முடைய வெளிப்பாடுகளைக் குறித்து எதை யேனும் அவன் அறிந்து கொள்ளும் போது, அவன் அவற்றைப் பரிகசிக்கின்றான். இத்தகையோர் இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டார்கள்.
[45:8] கடவுள்-ன் வெளிப்பாடுகள் அவனிடம் எடுத்துரைக்கப்படுவதைச் செவியேற்றும், பின்னர் அவற்றை அவன் ஒருபோதும் செவியேற்காத வனைப் போல, ஆணவத்துடன் தன் வழியில் பிடிவாதமாக இருக்கின்றவன். வலி நிறைந்த தொரு தண்டனையை அவனுக்கு வாக்களிப்பீராக.
[45:10] ஜஹன்னா அவர்களுக்காகக் காத்துக் கொண்டி ருக்கின்றது. அவர்களுடைய சம்பாத்தியங்களோ, அன்றிக் கடவுள்-உடன் அவர்கள் அமைத்துக் கொண்ட இணைத் தெய்வங்களோ அவர்களுக்கு உதவாது. அவர்கள் பயங்கரமானதொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.