Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 47:16 — முஹம்ம

அவர்களில் சிலர் உம்மைக் கவனத்துடன் செவியேற்கின்றனர், பின்னர் அவர்கள் பிரிந்து சென்றவுடன் அறிவூட்டப்பெற்றவர்களிடம் அவர்கள், “அவர் இப்போது என்ன கூறினார்?” என்று கேட்கின்றார்கள். கடவுள் இவ்விதமாக அவர்களுடைய இதயங்களில் முத்திரையிடுகின்றார், மேலும் அதன் விளைவாக, அவர்கள் தங்களுடைய சுய அபிப்பிராயங்களை மட்டுமே பின்பற்று கின்றார்கள்.

[47:15] நன்னெறியாளர்களுக்கு வாக்களிக்கப் பட்டுள்ள சுவனத்தின் உவமானம் இதுவாகும்: அதில் மாசற்ற தண்ணீரைக் கொண்ட நதிகளும், மேலும் புத்தம் புதிய பாலாறுகளும், மேலும் மது ஆறுகளும் - அருந்துபவர்களுக்கு மதுர மானது - மேலும் வடிகட்டப்பட்ட தேனாறுகளும் உள்ளன. அதிலே அனைத்துக் கனிவர்க்கங் களும், மேலும் அவர்களுடைய இரட்சகரின் மன்னிப்பும் அவர்களுக்குக் கிடைக்கும். (அவர்கள் மேலானவர்களா) அல்லது நரக நெருப்பில் என்றென்றும் தங்கியிருந்து, மேலும் அவர்களுடைய குடல்களைக் கிழித்து விடுகின்ற நரக தண்ணீரை அருந்துகின்றவர்களா?

[47:17] வழிகாட்டப்பட்டவர்களைப் பொறுத்த வரை, அவர்களுடைய வழிகாட்டலை அவர் அதிகரிக் கின்றார், மேலும் அவர்களுடைய நன்னெறியை அவர்களுக்கு வழங்குகின்றார்.