குர்ஆன் 47:19 — முஹம்ம
நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்: “கடவுள்-உடன் வேறு தெய்வம் எதுவும் இல்லை,”* மேலும் உம்முடைய பாவங்களுக்காகவும் மேலும் நம்பிக்கை கொண்ட ஆண்கள், மற்றும் பெண்கள் அனைவருடைய பாவங் களுக்காகவும் மன்னிப்புக் கேட்பீராக. உங்களுடைய தீர்மானங்களையும் மேலும் உங்களுடைய இறுதி விதியையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[47:18] அந்த நேரம் அவர்களிடம் திடீரென வரும் வரை அவர்கள் காத்திருக்கின்றனரா? அதற்குரிய அடையாளங்கள் அனைத்தும் ஏற்கனவே வந்து விட்டன*. அந்த நேரம் அவர்களிடம் வந்து விட்டால், தங்களுக்குரிய தூதுச்செய்தி யினால் எவ்வாறு அவர்கள் பயனடைவார்கள்?
[47:20] நம்பிக்கை கொண்டவர்கள்: “எப்பொழுது ஒரு புதிய சூரா வெளிப்படுத்தப்படும்?” என்று கூறினார்கள். ஆனால் சண்டையிடுவதைப் பற்றி அதிலே குறிப்பிடப்பட்ட, நேரடியானதொரு சூரா வெளிப்படுத்தப்பட்ட பொழுது, தங்கள் நெஞ்சங்களில் சந்தேகங்களைத் தாங்கியிருந் தவர்கள், மரணம் அவர்களிடம் ஏற்கனவே வந்து விட்டதைப் போல உம்மை நோக்குவதை நீர் காண்பீர். இவ்விதமாக அவர்கள் வெளிப்படுத்திக் காட்டப்பட்டனர்.