Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 48:5 — வெற்றி

நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண் களை, ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் அவர் நிச்சயமாக நுழைய அனுமதிப்பார், அதில் அவர்கள் என்றெ ன்றும் தங்கியிருப்பார்கள். அவர்களுடைய பாவங்களை அவர் மன்னிப்பார். இதுதான், கடவுள்-ன் பார்வையில், மகத்தானதொரு மாபெரும் வெற்றியாகும்.

[48:4] அவர்தான் நம்பிக்கையாளர்களின் இதயங் களில், அவர்களுடைய விசுவாசத்துடன் கூடுத லாக மேலும் விசுவாசத்தை அதிகரிப்பதற் காக, மனத்திருப்தியை ஏற்படுத்தியவர். வானங்கள் மற்றும் பூமியின் அனைத்துப் படைகளும் கடவுள்-க்கே உரியவை. கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.

[48:6] மேலும் அவர் நயவஞ்சக ஆண்கள் மற்றும் பெண்களை மேலும், இணைத் தெய்வ வழிபாடு செய்கின்ற ஆண்கள் மற்றும் பெண்களைப் பழி தீர்ப்பார், ஏனெனில் அவர்கள் கடவுள்-ஐப் பற்றிக் கெட்ட எண்ணங்களைத் தாங்கி யிருந்தனர். அவர்களுடைய தீமை அவர்களுக் கெதிரான விளைவுகளையே திருப்பித் தரும். ஏனெனில் கடவுள் அவர்கள் மீது கோபம் கொண்டிருக்கின்றார், அவர்களைக் கண்டனம் செய்கின்றார், மேலும் அவர்களுக்காக ஜஹன்னாவைத் தயார் செய்துள்ளார். என்ன ஒரு துன்பகரமான விதி!