குர்ஆன் 5:100 — விருந்து
قُل لا يَستَوِى الخَبيثُ وَالطَّيِّبُ وَلَو أَعجَبَكَ كَثرَةُ الخَبيثِ ۚ فَاتَّقُوا اللَّهَ يٰأُولِى الأَلبٰبِ لَعَلَّكُم تُفلِحونَ
பிரகடனம் செய்வீராக: “கெட்டவை அபரிமிதமாக இருப்பது உங்களைக் கவர்ந்தபோதிலும், கெட்டவையும், நல்லவையும் சமமாகாது. அறிவுக் கூர்மை உடையோரே, (நீங்கள் சிறுபான்மை யினராக இருந்தாலும்) நீங்கள் வெற்றி அடையும் பொருட்டு, கடவுள்-இடம் பயபக்தியுடன் இருக்க வேண்டும்.
[5:99] தூதரின் ஒரே கடமை செய்தியை ஒப்படைப் பதே, மேலும் நீங்கள் வெளிப்படுத்தும் அனைத் தையும், நீங்கள் மறைக்கும் அனைத்தையும் கடவுள் அறிகின்றார்.
[5:101] நம்பிக்கை கொண்டோரே, சில விஷயங் களைப்பற்றி கேட்காதீர்கள். அவை அவற்றின் சரியான நேரத்திற்கு முன்னால் உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்குத் தீங்கி ழைத்துவிடும். நீங்கள் குர்ஆனின் ஒளியில் அவற்றைப் பற்றி கேட்டால், அவை உங்களுக்குத் தெளிவாகிவிடும். கடவுள் அவற்றை வேண்டு மென்றே பொருட்படுத்தாது விட்டுவிட்டார். கடவுள் மன்னிப்பவர், இரக்கம் மிக்கவர்.