Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:101 — விருந்து

நம்பிக்கை கொண்டோரே, சில விஷயங் களைப்பற்றி கேட்காதீர்கள். அவை அவற்றின் சரியான நேரத்திற்கு முன்னால் உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்குத் தீங்கி ழைத்துவிடும். நீங்கள் குர்ஆனின் ஒளியில் அவற்றைப் பற்றி கேட்டால், அவை உங்களுக்குத் தெளிவாகிவிடும். கடவுள் அவற்றை வேண்டு மென்றே பொருட்படுத்தாது விட்டுவிட்டார். கடவுள் மன்னிப்பவர், இரக்கம் மிக்கவர்.

[5:100] பிரகடனம் செய்வீராக: “கெட்டவை அபரிமிதமாக இருப்பது உங்களைக் கவர்ந்தபோதிலும், கெட்டவையும், நல்லவையும் சமமாகாது. அறிவுக் கூர்மை உடையோரே, (நீங்கள் சிறுபான்மை யினராக இருந்தாலும்) நீங்கள் வெற்றி அடையும் பொருட்டு, கடவுள்-இடம் பயபக்தியுடன் இருக்க வேண்டும்.

[5:102] உங்களுக்கு முன்பு மற்றவர்களும் இதே கேள்விகளை கேட்டார்கள், பின்னர் அவற்றை நம்ப மறுத்தவர்களாகிவிட்டார்கள்.