Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:104 — விருந்து

“கடவுள் வெளிப்படுத்தியவற்றின்பாலும், மேலும் தூதரின் பாலும் வாருங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள், “எங்களுடைய பெற்றோர்கள் செய்து கொண்டிருந்ததில் எதை நாங்கள் கண்டோ மோ, அதுவே எங்களுக்குப் போதுமானது” என்று கூறுகின்றார்கள். என்ன, அவர் களுடைய பெற்றோர்கள் ஒன்றும் அறியாதவர் களாகவும், வழிநடத்தப்படாதவர்களாகவும் இருந்தாலுமா?

[5:103] கடவுள் குறிப்பிட்ட வகையான ஆண்குட்டி களையும், பெண்குட்டிகளையும் கலந்து ஈன்றெடுக்கும் கால்நடைகளையோ, சத்தியம் செய்து விடுவிக்கப்பட்ட கால்நடைகளையோ, இரு ஆண்குட்டிகளைத் தொடர்ந்து பெற்றெடுத்ததையோ, பத்துக் குட்டிகளுக்கு வித்திட்ட எருதையோ தடைசெய்யவில்லை. நம்ப மறுப்பவர்கள் தான் கடவுள் -ஐப் பற்றி இது போன்ற பொய்களை நூதனமாக கண்டுபிடித்துள்ளார்கள், அவர்களில் பெரும்பாலோர் புரிந்துகொள்ளமாட்டார்கள்.

[5:105] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் உங்கள் கழுத்துக்களைப் பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டும். மற்றவர்கள் வழிகேட்டில் சென் றாலும், நீங்கள் நேர்வழியில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வரை, அவர்களால் உங்களுக்கு தீங்கு செய்ய இயலாது. உங்களுடைய உங்கள் எல்லோருடைய இறுதி விதியும் கடவுள்- இடம் உள்ளது, பின்னர் அவர் நீங்கள் செய்த அனைத்தையும் உங்களுக்கு அறிவிப்பார்.