Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:105 — விருந்து

நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் உங்கள் கழுத்துக்களைப் பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டும். மற்றவர்கள் வழிகேட்டில் சென் றாலும், நீங்கள் நேர்வழியில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வரை, அவர்களால் உங்களுக்கு தீங்கு செய்ய இயலாது. உங்களுடைய உங்கள் எல்லோருடைய இறுதி விதியும் கடவுள்- இடம் உள்ளது, பின்னர் அவர் நீங்கள் செய்த அனைத்தையும் உங்களுக்கு அறிவிப்பார்.

[5:104] “கடவுள் வெளிப்படுத்தியவற்றின்பாலும், மேலும் தூதரின் பாலும் வாருங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள், “எங்களுடைய பெற்றோர்கள் செய்து கொண்டிருந்ததில் எதை நாங்கள் கண்டோ மோ, அதுவே எங்களுக்குப் போதுமானது” என்று கூறுகின்றார்கள். என்ன, அவர் களுடைய பெற்றோர்கள் ஒன்றும் அறியாதவர் களாகவும், வழிநடத்தப்படாதவர்களாகவும் இருந்தாலுமா?

[5:106] நம்பிக்கை கொண்டோரே, உங்களில் ஒருவர் இறக்கும் தருவாயில், உயிலுக்குச் சாட்சியாக உங்களுக்கிடையே உள்ள நியாயமான இருவர் இருக்க வேண்டும். நீங்கள் பிரயாணத்தில் இருந்தால், அப்போது இரண்டு வேறு நபர்கள் சாட்சியாக செயல்படலாம். உங்கள் சந்தேகங் களை அவர்கள் நிவர்த்தி செய்வதற்காக தொடர்புத் தொழுகையை (ஸலாத்) நிறைவு செய்த பின்னர், கடவுள் மீது சத்தியம் செய்து, “உயில் எழுதியவர் எங்களுடைய உறவினராக இருந்தாலும் நாங்கள் இதை சுயலாபம் அடைவதற்காக பயன்படுத்த மாட்டோம், அன்றி கடவுள்-உடைய அத்தாட்சியை மறைக்கவும் மாட்டோம், அவ்வாறு மறைத்தால் நாங்கள் பாவிகளாகி விடுவோம்”, என்று கூற வேண்டும்.