Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:106 — விருந்து

நம்பிக்கை கொண்டோரே, உங்களில் ஒருவர் இறக்கும் தருவாயில், உயிலுக்குச் சாட்சியாக உங்களுக்கிடையே உள்ள நியாயமான இருவர் இருக்க வேண்டும். நீங்கள் பிரயாணத்தில் இருந்தால், அப்போது இரண்டு வேறு நபர்கள் சாட்சியாக செயல்படலாம். உங்கள் சந்தேகங் களை அவர்கள் நிவர்த்தி செய்வதற்காக தொடர்புத் தொழுகையை (ஸலாத்) நிறைவு செய்த பின்னர், கடவுள் மீது சத்தியம் செய்து, “உயில் எழுதியவர் எங்களுடைய உறவினராக இருந்தாலும் நாங்கள் இதை சுயலாபம் அடைவதற்காக பயன்படுத்த மாட்டோம், அன்றி கடவுள்-உடைய அத்தாட்சியை மறைக்கவும் மாட்டோம், அவ்வாறு மறைத்தால் நாங்கள் பாவிகளாகி விடுவோம்”, என்று கூற வேண்டும்.

[5:105] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் உங்கள் கழுத்துக்களைப் பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டும். மற்றவர்கள் வழிகேட்டில் சென் றாலும், நீங்கள் நேர்வழியில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வரை, அவர்களால் உங்களுக்கு தீங்கு செய்ய இயலாது. உங்களுடைய உங்கள் எல்லோருடைய இறுதி விதியும் கடவுள்- இடம் உள்ளது, பின்னர் அவர் நீங்கள் செய்த அனைத்தையும் உங்களுக்கு அறிவிப்பார்.

[5:107] சாட்சிகள் பாரபட்சம் காட்டும் குற்றவாளி களாகக் கண்டுபிடிக்கப்பட்டால், அப்போது வேறு இருவரை அவர்களுடைய இடத்தை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ள வேண்டும். முதல் சாட்சிகளால் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், மேலும் அவர்கள் கடவுள் மீது சத்தியம் செய்து; “எங்களுடைய சாட்சி அவர்களுடையதைக் காட்டிலும் உண்மை யானது; நாங்கள் பாரபட்சமாக இருக்க மாட்டோம். இல்லையேல், நாங்கள் வரம்பு மீறியவர்களாகி விடுவோம்” என்று கூற வேண்டும்.