குர்ஆன் 5:107 — விருந்து
சாட்சிகள் பாரபட்சம் காட்டும் குற்றவாளி களாகக் கண்டுபிடிக்கப்பட்டால், அப்போது வேறு இருவரை அவர்களுடைய இடத்தை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ள வேண்டும். முதல் சாட்சிகளால் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், மேலும் அவர்கள் கடவுள் மீது சத்தியம் செய்து; “எங்களுடைய சாட்சி அவர்களுடையதைக் காட்டிலும் உண்மை யானது; நாங்கள் பாரபட்சமாக இருக்க மாட்டோம். இல்லையேல், நாங்கள் வரம்பு மீறியவர்களாகி விடுவோம்” என்று கூற வேண்டும்.
[5:106] நம்பிக்கை கொண்டோரே, உங்களில் ஒருவர் இறக்கும் தருவாயில், உயிலுக்குச் சாட்சியாக உங்களுக்கிடையே உள்ள நியாயமான இருவர் இருக்க வேண்டும். நீங்கள் பிரயாணத்தில் இருந்தால், அப்போது இரண்டு வேறு நபர்கள் சாட்சியாக செயல்படலாம். உங்கள் சந்தேகங் களை அவர்கள் நிவர்த்தி செய்வதற்காக தொடர்புத் தொழுகையை (ஸலாத்) நிறைவு செய்த பின்னர், கடவுள் மீது சத்தியம் செய்து, “உயில் எழுதியவர் எங்களுடைய உறவினராக இருந்தாலும் நாங்கள் இதை சுயலாபம் அடைவதற்காக பயன்படுத்த மாட்டோம், அன்றி கடவுள்-உடைய அத்தாட்சியை மறைக்கவும் மாட்டோம், அவ்வாறு மறைத்தால் நாங்கள் பாவிகளாகி விடுவோம்”, என்று கூற வேண்டும்.
[5:108] இது அவர்கள் புறமிருந்து ஒரு நாணயமான சாட்சியத்தை ஊக்கப்படுத்துவதற்கும், அவர் களுடைய சாட்சி பிரமாணமும், அவர்களுக்கு முந்தைய சாட்சிகளின் பிரமாணம் போன்று புறக்கணிக்கப்பட்டு விடும் என்ற பயத்தையும் ஏற்படுத்த மிகவும் ஏற்றது. நீங்கள் கடவுள் -ஐக் கவனத்தில் கொள்ளவேண்டும் மேலும் கவனமாக கேட்க வேண்டும், கடவுள் தீயவர்களை வழி நடத்துவதில்லை.