குர்ஆன் 5:108 — விருந்து
இது அவர்கள் புறமிருந்து ஒரு நாணயமான சாட்சியத்தை ஊக்கப்படுத்துவதற்கும், அவர் களுடைய சாட்சி பிரமாணமும், அவர்களுக்கு முந்தைய சாட்சிகளின் பிரமாணம் போன்று புறக்கணிக்கப்பட்டு விடும் என்ற பயத்தையும் ஏற்படுத்த மிகவும் ஏற்றது. நீங்கள் கடவுள் -ஐக் கவனத்தில் கொள்ளவேண்டும் மேலும் கவனமாக கேட்க வேண்டும், கடவுள் தீயவர்களை வழி நடத்துவதில்லை.
[5:107] சாட்சிகள் பாரபட்சம் காட்டும் குற்றவாளி களாகக் கண்டுபிடிக்கப்பட்டால், அப்போது வேறு இருவரை அவர்களுடைய இடத்தை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ள வேண்டும். முதல் சாட்சிகளால் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், மேலும் அவர்கள் கடவுள் மீது சத்தியம் செய்து; “எங்களுடைய சாட்சி அவர்களுடையதைக் காட்டிலும் உண்மை யானது; நாங்கள் பாரபட்சமாக இருக்க மாட்டோம். இல்லையேல், நாங்கள் வரம்பு மீறியவர்களாகி விடுவோம்” என்று கூற வேண்டும்.
[5:109] கடவுள் தூதர்களை அழைத்து, “உங்களுக் குரிய மறுமொழி எவ்வாறு இருந்தது?” என்று கேட்கும் அந்த நாள் வரும், அதற்கு அவர்கள், “அது பற்றிய அறிவு எங்களுக்கு இல்லை, நீரே எல்லா இரகசியங்களையும் அறிந்தவர்”, என்று கூறுவார்கள்.