குர்ஆன் 5:109 — விருந்து
கடவுள் தூதர்களை அழைத்து, “உங்களுக் குரிய மறுமொழி எவ்வாறு இருந்தது?” என்று கேட்கும் அந்த நாள் வரும், அதற்கு அவர்கள், “அது பற்றிய அறிவு எங்களுக்கு இல்லை, நீரே எல்லா இரகசியங்களையும் அறிந்தவர்”, என்று கூறுவார்கள்.
[5:108] இது அவர்கள் புறமிருந்து ஒரு நாணயமான சாட்சியத்தை ஊக்கப்படுத்துவதற்கும், அவர் களுடைய சாட்சி பிரமாணமும், அவர்களுக்கு முந்தைய சாட்சிகளின் பிரமாணம் போன்று புறக்கணிக்கப்பட்டு விடும் என்ற பயத்தையும் ஏற்படுத்த மிகவும் ஏற்றது. நீங்கள் கடவுள் -ஐக் கவனத்தில் கொள்ளவேண்டும் மேலும் கவனமாக கேட்க வேண்டும், கடவுள் தீயவர்களை வழி நடத்துவதில்லை.
[5:110] கடவுள் கூறுவார், “மேரியின் மகனாகிய இயேசுவே, உம்மீதும் உம்முடைய தாயார் மீதும் என்னுடைய அருட்கொடைகளை நினைவு கூர்வீராக. நீர் தொட்டிலில் இருந்த போதும் மேலும் வாலிபரான போதும் மக்களிடம் பேசுவதற்கான ஆற்றலைத் தர பரிசுத்த ஆவியைக் கொண்டு நான் உதவி செய்தேன். நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தோராவையும், சுவிசேஷத்தையும் கற்றுக் கொடுத்தேன். நீர் என்னுடைய அனுமதியின்படி களிமண்ணிலிருந்து ஒரு பறவை உருவத்தை உருவாக்கினீர், பின்னர் அதனுள் ஊதினீர், அப்போது அது என்னுடைய அனுமதியின்படி ஓர் உயிருள்ள பறவையாக மாறியதை நினைவு கூர்வீராக. நீர் என்னுடைய அனுமதியின்படி குருடரையும், குஷ்டரோகியையும் குணப் படுத்தினீர், மேலும் என்னுடைய அனுமதியின் படி இறந்தவரை உயிர்ப்பித்தீர். ஆழ்ந்த அற்புதங்களை நீர் அவர்களுக்கு காட்டிய போதும் உமக்கு தீங்கு செய்ய விரும்பிய இஸ்ரவேலின் சந்ததியரிடம் இருந்து உம்மை நான் பாதுகாத்ததை”, நினைவு கூர்வீராக. அவர்களுக்கிடையே இருந்த நம்பிக்கையற்ற வர்கள். ‘இது தெளிவான மாயாஜாலம்’, என்று கூறினார்கள்.