குர்ஆன் 5:113 — விருந்து
قالوا نُريدُ أَن نَأكُلَ مِنها وَتَطمَئِنَّ قُلوبُنا وَنَعلَمَ أَن قَد صَدَقتَنا وَنَكونَ عَلَيها مِنَ الشّٰهِدينَ
அவர்கள், “நாங்கள் அதிலிருந்து உட்கொள்ளவும், மேலும் எங்களுடைய இதயங்களை மறுஉறுதி செய்து கொள்ளவும், மேலும் நீங்கள் எங்களிடம் கூறியது சத்தியம் தான் என்று உறுதியாகத் தெரிந்து கொள்ளவும் விரும்புகின்றோம். அவற்றிற்குச் சாட்சிகளாக நாங்கள் பணிபுரிவோம்” என்று கூறினார்கள்.
[5:112] சீடர்கள், “மேரியின் மகன் இயேசுவே, உம்முடைய இரட்சகரால் வானத்திலிருந்து எங்களுக்கு ஒரு விருந்தை அனுப்ப முடியுமா?” என்று கூறியதை நினைவு கூர்வீராக. அவர், “நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், கடவுள்-இடம் பயபக்தியுடன் இருக்க வேண்டும்” என்று கூறினார்.
[5:114] மேரியின் மகனாகிய இயேசு, “எங்கள் தெய்வமே, எங்கள் இரட்சகரே, எங்களுக்கு வானத் திலிருந்து ஒரு விருந்தை அனுப்புவீராக. அது எங்களில் உள்ள ஒவ்வொருவருக்கும், தாராளமாகவும் மேலும் உம்மிடமிருந்து ஒரு அடையாளத்தையும் கொண்டுவருவதாகவும் இருக்கட்டும். எங்களுக்கு வழங்குவீராக; நீரே வழங்குவதில் சிறந்தவர்” என்று கூறினார்.