Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:116 — விருந்து

கடவுள், “மேரியின் மகனாகிய இயேசுவே, * நீர் மக்களிடம், “ என்னையும், என்னுடைய தாயாரையும் கடவுள்-உடன் இணையாக்கி வைத்து வழிபடுங்கள் என்று கூறினீரா?” என்று கூறுவார். அதற்கு அவர் கூறுவார், “நீரே துதிப்பிற்குரியவர். எது சரியில்லையோ அதை நான் கூறியிருக்க இயலாது. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீர் அதை முன்பே தெரிந்திருப்பீர். என்னுடைய எண்ணங்களை நீர் அறிவீர், உம்முடைய எண்ணங்களை நான் அறியமாட்டேன். அனைத்து இரகசியங் களையும் நீர் அறிவீர்.

[5:115] கடவுள், “ நான் அதனைக் கீழே அனுப்புகின் றேன். இதற்குப் பிறகு உங்களில் எவரேனும் நம்ப மறுத்தால் மற்ற எவரையும்* ஒரு போதும் தண்டித்திராத அளவு, அவரை நான் தண்டிப்பேன்” என்று கூறினார்.

[5:117] “நான் எதைக் கூறவேண்டும் என்று நீர் எனக்கு கட்டளையிட்டீரோ அதை மட்டுமே அவர்களுக்கு நான் கூறினேன், அது: ‘என்னு டைய இரட்சகரும் மேலும் உங்களுடைய இரட்சகருமாகிய கடவுள்-ஐ நீங்கள் வழிபட வேண்டும்’ என்பதே. அவர்களோடு நான் வாழ்ந்த காலம் வரை, அவர்களுக்கிடையில் நான் ஒரு சாட்சியாக இருந்தேன். பூமியில் என்னுடைய வாழ்க்கையை நீர் முடிவடையச் செய்தபோது, நீர் அவர்கள் மீது கண்காணிப் பாளர் ஆகிவிட்டீர். அனைத்திற்கும் நீரே சாட்சியாளர்.