Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:115 — விருந்து

கடவுள், “ நான் அதனைக் கீழே அனுப்புகின் றேன். இதற்குப் பிறகு உங்களில் எவரேனும் நம்ப மறுத்தால் மற்ற எவரையும்* ஒரு போதும் தண்டித்திராத அளவு, அவரை நான் தண்டிப்பேன்” என்று கூறினார்.

[5:114] மேரியின் மகனாகிய இயேசு, “எங்கள் தெய்வமே, எங்கள் இரட்சகரே, எங்களுக்கு வானத் திலிருந்து ஒரு விருந்தை அனுப்புவீராக. அது எங்களில் உள்ள ஒவ்வொருவருக்கும், தாராளமாகவும் மேலும் உம்மிடமிருந்து ஒரு அடையாளத்தையும் கொண்டுவருவதாகவும் இருக்கட்டும். எங்களுக்கு வழங்குவீராக; நீரே வழங்குவதில் சிறந்தவர்” என்று கூறினார்.

[5:116] கடவுள், “மேரியின் மகனாகிய இயேசுவே, * நீர் மக்களிடம், “ என்னையும், என்னுடைய தாயாரையும் கடவுள்-உடன் இணையாக்கி வைத்து வழிபடுங்கள் என்று கூறினீரா?” என்று கூறுவார். அதற்கு அவர் கூறுவார், “நீரே துதிப்பிற்குரியவர். எது சரியில்லையோ அதை நான் கூறியிருக்க இயலாது. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீர் அதை முன்பே தெரிந்திருப்பீர். என்னுடைய எண்ணங்களை நீர் அறிவீர், உம்முடைய எண்ணங்களை நான் அறியமாட்டேன். அனைத்து இரகசியங் களையும் நீர் அறிவீர்.