குர்ஆன் 5:12 — விருந்து
وَلَقَد أَخَذَ اللَّهُ ميثٰقَ بَنى إِسرٰءيلَ وَبَعَثنا مِنهُمُ اثنَى عَشَرَ نَقيبًا ۖ وَقالَ اللَّهُ إِنّى مَعَكُم ۖ لَئِن أَقَمتُمُ الصَّلوٰةَ وَءاتَيتُمُ الزَّكوٰةَ وَءامَنتُم بِرُسُلى وَعَزَّرتُموهُم وَأَقرَضتُمُ اللَّهَ قَرضًا حَسَنًا لَأُكَفِّرَنَّ عَنكُم سَيِّـٔاتِكُم وَلَأُدخِلَنَّكُم جَنّٰتٍ تَجرى مِن تَحتِهَا الأَنهٰرُ ۚ فَمَن كَفَرَ بَعدَ ذٰلِكَ مِنكُم فَقَد ضَلَّ سَواءَ السَّبيلِ
இஸ்ரவேலின் சந்ததியினரிடமிருந்து ஒரு உடன்படிக்கையை கடவுள் எடுத்திருந்தார், மேலும் அவர்களுக்கிடையில் பன்னிரண்டு குலத் தலைவர்களை நாம் எழுப்பினோம், மேலும் கடவுள், “தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடித்து, கடமையான தர்மத்தை (ஜகாத்) கொடுத்து, மேலும் என்னுடைய தூதர்களின் மீது நம்பிக்கை கொண்டு, அவர்களை கண்ணியம் செய்து, மேலும் நன்னெறியினை கடனாக கடவுள் -க்கு தொடர்ந்து கொடுக்கும் வரையிலும் நான் உங்களுடன் இருக்கின்றேன். அதன் பின்னர் நான் உங்களுடைய பாவங்களைத் தள்ளுபடி செய்வேன், மேலும் ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களில் உங்களை பிரவேசிக்கச் செய்வேன். இதன் பின்னரும் எவனொருவன் நம்ப மறுக்கின்றானோ, அவன் உண்மையில் நேரான பாதையிலிருந்து வழி தவறி விட்டான்” என்று கூறினார்.
[5:11] நம்பிக்கை கொண்டோரே, உங்கள் மீதுள்ள கடவுள்-ன் அருட்கொடைகளை நினைவு கூருங்கள்; மக்களில் சிலர் உங்களுக்கு எதிராக வலுச்சண்டைக்கு தங்களுடைய கைகளை நீட்டிய போது, அவர் உங்களைப் பாதுகாத்தார், மேலும் அவர்களுடைய கைகளைத் தடுத்து நிறுத்தினார். நீங்கள் கடவுள்-ஐக் கவனத்தில் கொள்ளுங்கள்; கடவுள்-ன் மீது நம்பிக்கையாளர்கள் பொறுப்பு ஏற்படுத்தட்டும்.
[5:13] அவர்களுடைய உடன்படிக்கை மீறலின் ஒரு விளைவாகவே நாம் அவர்களை தண்டித்தோம், மேலும் அவர்களுடைய இதயங்களை இறுகும்படி செய்தோம். அதன் விளைவாக அவர்கள் வார்த்தைகளை அவற்றின் சூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்டு எடுத்துக் கொண்டார்கள், மேலும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளில் சிலவற்றை அலட்சியம் செய்தார்கள். அவர்களில் சிலரைத் தவிர, அவர்களிடமிருந்து துரோகத்தை நீங்கள் தொடர்ந்து காண்பீர்கள். நீங்கள் அவர்களுடைய பிழைகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும், மேலும் அவர்களை புறக்கணித்து விட வேண்டும். பரந்த உள்ளமுடையவர்களை கடவுள் நேசிக்கின்றார்.