Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:34 — விருந்து

நீங்கள் அவர்களைத் தோற்கடிப்பதற்கு முன், எவர்கள் வருந்தித்திருந்தி விடுகின்றார்களோ, அவர்கள் விலக்களிக்கப்பட்டவர்கள். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

[5:33] கடவுள் மற்றும் அவருடைய தூதரோடு சண்டையிடுபவர்களுக்கும், மேலும் பயங்கர மான குற்றங்கள் செய்பவர்களுக்கும், நியாய மான தண்டனை அவர்கள் கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது அவர்களுடைய மாறுகைகள் மற்றும் மாறுகால்கள் வெட்டப்படுவது, அல்லது நாடு கடத்தப்படுவது. இது அவர்களை இந்த வாழ்க்கையில் இழிவு படுத்துவதற்காக, பின்னர் மறுவுலகில் அவர்கள் இதை விட மிக மோசமான தண்டனையை அனுபவிப்பார்கள்.

[5:35] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்க வேண்டும், மேலும் அவரிடம் செல்லும் வழிகளையும், உபாயங்களையும் தேடிக் கொள்ள வேண்டும், மேலும் நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு அவருக்காகப் பாடுபடவேண்டும்.