Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:35 — விருந்து

நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்க வேண்டும், மேலும் அவரிடம் செல்லும் வழிகளையும், உபாயங்களையும் தேடிக் கொள்ள வேண்டும், மேலும் நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு அவருக்காகப் பாடுபடவேண்டும்.

[5:34] நீங்கள் அவர்களைத் தோற்கடிப்பதற்கு முன், எவர்கள் வருந்தித்திருந்தி விடுகின்றார்களோ, அவர்கள் விலக்களிக்கப்பட்டவர்கள். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

[5:36] நிச்சயமாக நம்பமறுத்தவர்கள், அவர்கள் பூமியில் உள்ள அனைத்தையும் உடையவர் களாக, அதைப் போல் இரண்டு மடங்கை உடையவர்களாக இருந்தாலும், மேலும் அதை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் அந்த நாளில் தண்டனையில் இருந்து தப்பிப்பதற்குப் பகரமாக கொடுத்தாலும், அது அவர்களிட மிருந்து ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவர் கள் ஒரு வலி மிகுந்த தண்டனைக்குள்ளாகி விட்டார்கள்.