குர்ஆன் 5:36 — விருந்து
நிச்சயமாக நம்பமறுத்தவர்கள், அவர்கள் பூமியில் உள்ள அனைத்தையும் உடையவர் களாக, அதைப் போல் இரண்டு மடங்கை உடையவர்களாக இருந்தாலும், மேலும் அதை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் அந்த நாளில் தண்டனையில் இருந்து தப்பிப்பதற்குப் பகரமாக கொடுத்தாலும், அது அவர்களிட மிருந்து ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவர் கள் ஒரு வலி மிகுந்த தண்டனைக்குள்ளாகி விட்டார்கள்.
[5:35] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்க வேண்டும், மேலும் அவரிடம் செல்லும் வழிகளையும், உபாயங்களையும் தேடிக் கொள்ள வேண்டும், மேலும் நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு அவருக்காகப் பாடுபடவேண்டும்.
[5:37] அவர்கள் நரகத்தை விட்டு வெளியேறு வதற்கு விரும்புவார்கள். ஆனால் அந்தோ, அவர்கள் அதிலிருந்து ஒரு போதும் வெளியேற இயலாது; அவர்களுடைய தண்டனை நிரந்தர மானது.