குர்ஆன் 5:37 — விருந்து
அவர்கள் நரகத்தை விட்டு வெளியேறு வதற்கு விரும்புவார்கள். ஆனால் அந்தோ, அவர்கள் அதிலிருந்து ஒரு போதும் வெளியேற இயலாது; அவர்களுடைய தண்டனை நிரந்தர மானது.
[5:36] நிச்சயமாக நம்பமறுத்தவர்கள், அவர்கள் பூமியில் உள்ள அனைத்தையும் உடையவர் களாக, அதைப் போல் இரண்டு மடங்கை உடையவர்களாக இருந்தாலும், மேலும் அதை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் அந்த நாளில் தண்டனையில் இருந்து தப்பிப்பதற்குப் பகரமாக கொடுத்தாலும், அது அவர்களிட மிருந்து ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவர் கள் ஒரு வலி மிகுந்த தண்டனைக்குள்ளாகி விட்டார்கள்.
[5:38] திருடியவர், ஆணோ அல்லது பெண்ணோ, அவர்களுடைய குற்றத்திற்குத் தண்டனை யாகவும்,* மேலும் கடவுள்-இடமிருந்து ஒரு உதாரணமாகத் திகழவும் நீங்கள் அவர்களுடைய கரங்களில் அடையாளமிட வேண்டும். கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.