குர்ஆன் 5:33 — விருந்து
إِنَّما جَزٰؤُا۟ الَّذينَ يُحارِبونَ اللَّهَ وَرَسولَهُ وَيَسعَونَ فِى الأَرضِ فَسادًا أَن يُقَتَّلوا أَو يُصَلَّبوا أَو تُقَطَّعَ أَيديهِم وَأَرجُلُهُم مِن خِلٰفٍ أَو يُنفَوا مِنَ الأَرضِ ۚ ذٰلِكَ لَهُم خِزىٌ فِى الدُّنيا ۖ وَلَهُم فِى الءاخِرَةِ عَذابٌ عَظيمٌ
கடவுள் மற்றும் அவருடைய தூதரோடு சண்டையிடுபவர்களுக்கும், மேலும் பயங்கர மான குற்றங்கள் செய்பவர்களுக்கும், நியாய மான தண்டனை அவர்கள் கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது அவர்களுடைய மாறுகைகள் மற்றும் மாறுகால்கள் வெட்டப்படுவது, அல்லது நாடு கடத்தப்படுவது. இது அவர்களை இந்த வாழ்க்கையில் இழிவு படுத்துவதற்காக, பின்னர் மறுவுலகில் அவர்கள் இதை விட மிக மோசமான தண்டனையை அனுபவிப்பார்கள்.
[5:32] இதன் காரணமாக, கொலையோ அல்லது பயங்கரக் குற்றங்களோ செய்யாத ஒருவரை எவனொருவன் கொலை செய்கின்றானோ, அவன் எல்லா மக்களையும் கொலை செய்தவன் போலாவான் என்று இஸ்ரவேலின் சந்ததியினருக்கு நாம் கட்டளையிட்டோம். மேலும் எவரொருவர் ஓர் உயிரைக் காப்பாற்றி வாழ விட்டு விடுகின்றாரோ, அவர் எல்லா மக்களையும் வாழவிட்டவர் போலாவார். நம்முடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகள் மற்றும் வெளிப்பாடுகளுடன் சென்றார்கள், ஆனால், இவை அனைத்திற்குப் பிறகும், அவர்களில் பெரும்பாலோர் வரம்பு மீறல்களிலேயே நிலைத்திருக்கின்றார்கள்.
[5:34] நீங்கள் அவர்களைத் தோற்கடிப்பதற்கு முன், எவர்கள் வருந்தித்திருந்தி விடுகின்றார்களோ, அவர்கள் விலக்களிக்கப்பட்டவர்கள். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.