Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:32 — விருந்து

இதன் காரணமாக, கொலையோ அல்லது பயங்கரக் குற்றங்களோ செய்யாத ஒருவரை எவனொருவன் கொலை செய்கின்றானோ, அவன் எல்லா மக்களையும் கொலை செய்தவன் போலாவான் என்று இஸ்ரவேலின் சந்ததியினருக்கு நாம் கட்டளையிட்டோம். மேலும் எவரொருவர் ஓர் உயிரைக் காப்பாற்றி வாழ விட்டு விடுகின்றாரோ, அவர் எல்லா மக்களையும் வாழவிட்டவர் போலாவார். நம்முடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகள் மற்றும் வெளிப்பாடுகளுடன் சென்றார்கள், ஆனால், இவை அனைத்திற்குப் பிறகும், அவர்களில் பெரும்பாலோர் வரம்பு மீறல்களிலேயே நிலைத்திருக்கின்றார்கள்.

[5:31] அவனுடைய சகோதரனின் பிணத்தை எவ்வாறு புதைப்பது என அவனுக்கு கற்றுத்தருவதற் காகக் கடவுள் பின்னர் ஓர் அண்டங்காக் கையை அனுப்பி மண்ணைத் தோண்டச் செய்தார். அவன் “ எனக்கு கேடுதான், இந்த அண்டங்காக்கையின் அளவு கூட புத்தி சாலியாக இருந்து, என்னுடைய சகோதரனின் பிணத்தை புதைப்பதற்கு நான் தவறி விட்டேன்” என்று கூறினான். அவன் குற்ற முணர்ந்ததால் ஏற்படும் வருத்தத்தில் மூழ்கியவன் ஆனான்.

[5:33] கடவுள் மற்றும் அவருடைய தூதரோடு சண்டையிடுபவர்களுக்கும், மேலும் பயங்கர மான குற்றங்கள் செய்பவர்களுக்கும், நியாய மான தண்டனை அவர்கள் கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது அவர்களுடைய மாறுகைகள் மற்றும் மாறுகால்கள் வெட்டப்படுவது, அல்லது நாடு கடத்தப்படுவது. இது அவர்களை இந்த வாழ்க்கையில் இழிவு படுத்துவதற்காக, பின்னர் மறுவுலகில் அவர்கள் இதை விட மிக மோசமான தண்டனையை அனுபவிப்பார்கள்.