Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:46 — விருந்து

அவர்களைத் தொடர்ந்து, மேரியின் மகனாகிய இயேசுவை, முந்தைய வேதமான தோராவை உறுதிப்படுத்துபவராக நாம் அனுப்பினோம். நாம் அவருக்கு வழிகாட்டுதலையும், மேலும் ஒளியையும் கொண்ட, மேலும் முந்தைய வேதங்களையும், தோராவையும் உறுதிபடுத்து வதாகவும் மேலும் அதன் வழிகாட்டுதலையும், ஒளியையும் அதிகப்படுத்துவதாகவும் மேலும் நன்னெறியாளர்களுக்கு அறிவூட்டலாகவும் இருந்த சுவிசேஷத்தைக் கொடுத்தோம்.

[5:45] மேலும், உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்கிற்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், மேலும் காயத்திற்குச் சமமான காயம் என்று அதில் நாம் அவர்களுக்கு கட்டளையிட்டிருந் தோம். ஒருவர் தனக்கு உரியதை தர்மமாக விட்டுக் கொடுத்தால் அது அவருடைய பாவங்களுக்கு பரிகாரமாக ஆகும். எவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளுக்கு இணங்க தீர்ப்பு செய்யவில்லையோ அவர்கள் நேர்மையற்றவர்கள் ஆவர்.

[5:47] சுவிசேஷத்தையுடைய மக்கள்,அதிலுள்ள கடவுள்-ன் வெளிப்பாடுகளுக்கு இணங்க தீர்ப்பளிக்க வேண்டும். எவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளுக்கு இணங்க தீர்ப்பளிக்க வில்லையோ, அவர்கள் தீயவர்கள் ஆவர்.