குர்ஆன் 5:45 — விருந்து
மேலும், உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்கிற்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், மேலும் காயத்திற்குச் சமமான காயம் என்று அதில் நாம் அவர்களுக்கு கட்டளையிட்டிருந் தோம். ஒருவர் தனக்கு உரியதை தர்மமாக விட்டுக் கொடுத்தால் அது அவருடைய பாவங்களுக்கு பரிகாரமாக ஆகும். எவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளுக்கு இணங்க தீர்ப்பு செய்யவில்லையோ அவர்கள் நேர்மையற்றவர்கள் ஆவர்.
[5:44] வழிகாட்டலும் மற்றும் ஒளியும் கொண்டதாகத் தோராவை* நாம் இறக்கி அனுப்பினோம். அதற்கு இணங்க யூதர்களில் வேதம் வழங்கப் பட்டவர்களும், அவ்வாறே மதகுருமார்களும் மற்றும் பாதிரியார்களும் கடவுள்-ன் வேதத்தில் அவர்களுக்கு உத்தரவிட்டிருந்தபடியும், மேலும் அவர்கள் சாட்சியாக இருந்தபடியும் தீர்ப்பளித்தார்கள். ஆகையால், மனிதர்களிடம் பயபக்தியோடு இருக்காதீர்கள்; பதிலாக என்னிடமே பயபக்தியோடு இருக்க வேண்டும். மேலும் என்னுடைய வெளிப்பாடுகளை ஒரு மலிவான விலைக்கு வியாபாரம் செய்துவிடா தீர்கள். எவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளுக்கு இணங்க தீர்ப்பு அளிக்கவில்லையோ அவர்கள் நம்பமறுப்வர்கள் ஆவர்.
[5:46] அவர்களைத் தொடர்ந்து, மேரியின் மகனாகிய இயேசுவை, முந்தைய வேதமான தோராவை உறுதிப்படுத்துபவராக நாம் அனுப்பினோம். நாம் அவருக்கு வழிகாட்டுதலையும், மேலும் ஒளியையும் கொண்ட, மேலும் முந்தைய வேதங்களையும், தோராவையும் உறுதிபடுத்து வதாகவும் மேலும் அதன் வழிகாட்டுதலையும், ஒளியையும் அதிகப்படுத்துவதாகவும் மேலும் நன்னெறியாளர்களுக்கு அறிவூட்டலாகவும் இருந்த சுவிசேஷத்தைக் கொடுத்தோம்.