குர்ஆன் 5:44 — விருந்து
வழிகாட்டலும் மற்றும் ஒளியும் கொண்டதாகத் தோராவை* நாம் இறக்கி அனுப்பினோம். அதற்கு இணங்க யூதர்களில் வேதம் வழங்கப் பட்டவர்களும், அவ்வாறே மதகுருமார்களும் மற்றும் பாதிரியார்களும் கடவுள்-ன் வேதத்தில் அவர்களுக்கு உத்தரவிட்டிருந்தபடியும், மேலும் அவர்கள் சாட்சியாக இருந்தபடியும் தீர்ப்பளித்தார்கள். ஆகையால், மனிதர்களிடம் பயபக்தியோடு இருக்காதீர்கள்; பதிலாக என்னிடமே பயபக்தியோடு இருக்க வேண்டும். மேலும் என்னுடைய வெளிப்பாடுகளை ஒரு மலிவான விலைக்கு வியாபாரம் செய்துவிடா தீர்கள். எவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளுக்கு இணங்க தீர்ப்பு அளிக்கவில்லையோ அவர்கள் நம்பமறுப்வர்கள் ஆவர்.
[5:43] கடவுள்-உடைய சட்டங்களைக் கொண்ட தோரா அவர்களிடம் இருக்கும் போது, மேலும் அவர்கள் அதை புறக்கணிப்பதைத் தேர்ந்தெடுத்துவிட்ட பிறகு, அவர்களுக் கிடையில் தீர்ப்பளிக்க உம்மை ஏன் அவர்கள் கேட்கப்போகின்றார்கள்? அவர்கள் நம்பிக்கையாளர்கள் அல்ல.
[5:45] மேலும், உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்கிற்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், மேலும் காயத்திற்குச் சமமான காயம் என்று அதில் நாம் அவர்களுக்கு கட்டளையிட்டிருந் தோம். ஒருவர் தனக்கு உரியதை தர்மமாக விட்டுக் கொடுத்தால் அது அவருடைய பாவங்களுக்கு பரிகாரமாக ஆகும். எவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளுக்கு இணங்க தீர்ப்பு செய்யவில்லையோ அவர்கள் நேர்மையற்றவர்கள் ஆவர்.