Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:43 — விருந்து

கடவுள்-உடைய சட்டங்களைக் கொண்ட தோரா அவர்களிடம் இருக்கும் போது, மேலும் அவர்கள் அதை புறக்கணிப்பதைத் தேர்ந்தெடுத்துவிட்ட பிறகு, அவர்களுக் கிடையில் தீர்ப்பளிக்க உம்மை ஏன் அவர்கள் கேட்கப்போகின்றார்கள்? அவர்கள் நம்பிக்கையாளர்கள் அல்ல.

[5:42] அவர்கள் பொய்களின் ஆதரவாளர்கள்,மேலும் சட்டவிரோதமான சம்பாத்தியங்களை உண்பவர்கள். அவர்களுக்கிடையில் தீர்ப்பு அளிக்கும்படி உங்களிடம் அவர்கள் வந்தால், நீங்கள் அவர்களுக்கிடையில் தீர்ப்புச் செய்ய லாம் அல்லது அவர்களைப் புறக்கணிக்கலாம். நீங்கள் அவர்களைப் புறக்கணிப்பதைத் தேர்ந் தெடுத்தால், அவர்களால் உங்களுக்கு சிறிதளவும் தீங்கு செய்ய இயலாது. ஆனால் நீங்கள் அவர்களுக்கிடையே தீர்ப்பு அளித் தால், நீங்கள் நியாயமாகத் தீர்ப்பு அளிக்க வேண்டும். நியாயமானவர்களை கடவுள் நேசிக்கின்றார்.

[5:44] வழிகாட்டலும் மற்றும் ஒளியும் கொண்டதாகத் தோராவை* நாம் இறக்கி அனுப்பினோம். அதற்கு இணங்க யூதர்களில் வேதம் வழங்கப் பட்டவர்களும், அவ்வாறே மதகுருமார்களும் மற்றும் பாதிரியார்களும் கடவுள்-ன் வேதத்தில் அவர்களுக்கு உத்தரவிட்டிருந்தபடியும், மேலும் அவர்கள் சாட்சியாக இருந்தபடியும் தீர்ப்பளித்தார்கள். ஆகையால், மனிதர்களிடம் பயபக்தியோடு இருக்காதீர்கள்; பதிலாக என்னிடமே பயபக்தியோடு இருக்க வேண்டும். மேலும் என்னுடைய வெளிப்பாடுகளை ஒரு மலிவான விலைக்கு வியாபாரம் செய்துவிடா தீர்கள். எவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளுக்கு இணங்க தீர்ப்பு அளிக்கவில்லையோ அவர்கள் நம்பமறுப்வர்கள் ஆவர்.