குர்ஆன் 5:42 — விருந்து
அவர்கள் பொய்களின் ஆதரவாளர்கள்,மேலும் சட்டவிரோதமான சம்பாத்தியங்களை உண்பவர்கள். அவர்களுக்கிடையில் தீர்ப்பு அளிக்கும்படி உங்களிடம் அவர்கள் வந்தால், நீங்கள் அவர்களுக்கிடையில் தீர்ப்புச் செய்ய லாம் அல்லது அவர்களைப் புறக்கணிக்கலாம். நீங்கள் அவர்களைப் புறக்கணிப்பதைத் தேர்ந் தெடுத்தால், அவர்களால் உங்களுக்கு சிறிதளவும் தீங்கு செய்ய இயலாது. ஆனால் நீங்கள் அவர்களுக்கிடையே தீர்ப்பு அளித் தால், நீங்கள் நியாயமாகத் தீர்ப்பு அளிக்க வேண்டும். நியாயமானவர்களை கடவுள் நேசிக்கின்றார்.
[5:41] தூதரே, அவர்களுக்கிடையில் “நாங்கள் நம்புகின்றோம்” என்று தங்கள் வாயால் கூறி, அதே சமயம் அவர்களுடைய இதயங்கள் நம்பிக்கை கொள்ளாமல், நம்ப மறுப்பதின்பால் விரைந்து செல்பவர்களால் நீர் துன்பம் அடையாதீர். யூதர்களுக்கிடையில் சிலர், பொய்களுக்கு செவி சாய்த்தனர். அவர்கள் மக்களில், உங்களை ஒருபோதும் சந்தித் திராதவர்களுக்கும் மற்றும் சூழ்நிலைக்கு மாற்றமாக வார்த்தைகளைச் சிதைத்துவிட்டு அதன் பின் “இது உங்களுக்கு கொடுக்கப் பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள், ஆனால் வேறு ஏதாவது உங்களுக்கு கொடுக்கப்பட்டால் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்,” என்று கூறியவர்களுக்குச் செவி சாய்த்தனர். கடவுள் எவரை வேறு வழியில் திருப்ப நாடுகின்றாரோ, அவருக்கு, கடவுள்-க்கு எதிராக எவ்வித உதவியும் செய்ய உங்களால் இயலாது. அவர்களுடைய இதயங்களைத் தூய்மை படுத்தக் கடவுள் விரும்பவில்லை. இந்த உலகத்தில் அவர்கள் இழிவிற்குள்ளாவார்கள், மேலும் மறுவுலகில் அவர்கள் ஒரு பயங்கரமான தண்டனையை அனுபவிப்பார்கள்.
[5:43] கடவுள்-உடைய சட்டங்களைக் கொண்ட தோரா அவர்களிடம் இருக்கும் போது, மேலும் அவர்கள் அதை புறக்கணிப்பதைத் தேர்ந்தெடுத்துவிட்ட பிறகு, அவர்களுக் கிடையில் தீர்ப்பளிக்க உம்மை ஏன் அவர்கள் கேட்கப்போகின்றார்கள்? அவர்கள் நம்பிக்கையாளர்கள் அல்ல.