குர்ஆன் 5:56 — விருந்து
எவர்கள் தங்களை, கடவுள்-க்கும், அவரது தூதருக்கும் மேலும் நம்பிக்கை கொண் டோருக்கும் நண்பர்களாக்கிக் கொண்டார் களோ, அவர்கள் கடவுள்-உடைய கட்சியைச் சார்ந்தவர்கள்; நிச்சயமாக அவர்கள்தான் வெற்றியாளர்கள்.
[5:55] உங்களுடைய உண்மையான நண்பர்கள் யாரென்றால் கடவுள்-ம் மற்றும் அவருடைய தூதரும் மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடித்து, மற்றும் கடமையான தர்மத்தையும் (ஜகாத்) கொடுத்து வரக்கூடிய, நம்பிக்கையாளர்களும்தான், மேலும் அவர்கள் குனிந்து வழிபடுகின்றனர்.
[5:57] நம்பிக்கை கொண்டோரே, உங்களுடைய மார்க்கத்தைப் பரிகாசமும், கேலியும் செய்கின்ற முந்தைய வேதத்தைப் பெற்றவர்களுடனும், நம்பிக்கையற்றவர்களுடனும் நட்புக் கொள்ளா தீர்கள். நீங்கள் உண்மையிலேயே நம்பிக்கை யாளர்களாக இருந்தால், நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியுடன் இருக்க வேண்டும்.