Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:60 — விருந்து

“கடவுள்-உடைய பார்வையில் எவர்கள் மிகவும் கெட்டவர்கள் என்று நான் உங்களுக்கு கூறுகின்றேன்.அவர்கள் (மிகவும் இழிவடைந்த) குரங்குகளாகவும், பன்றிகளாகவும், மேலும் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களாகவும் அவரால் ஆக்கப்படும்வரை அவருடைய கோபத்திற்குள்ளாகி பின்னர் கடவுள்-ஆல் தண்டிக்கப்பட்டவர்களாவர். அவர்கள் மிக மிக மோசமானவர்கள், மேலும் நேரான பாதையி லிருந்து வெகுதூரம் விலகிப்போனவர்கள்” என்று கூறுவீராக.

[5:59] “வேதத்தையுடைய மக்களே, நாங்கள் கடவுள் -ஐயும், எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதையும், எங்களுக்கு முன்னர் வெளிப்படுத்தப் பட்டதையும் நம்புகின்ற காரணத்தாலும், மேலும் உங்களில் பெரும்பாலோர் நன்னெறியாளர் களாக இல்லாத காரணத்தினாலும் தான், நீங்கள் எங்களை வெறுக்கின்றீர்கள் அல்லவா?” என்று கூறுவீராக.

[5:61] முற்றிலும் நம்பிக்கையின்றி நுழைந்து, மேலும் முற்றிலும் நம்பிக்கையின்றி வெளியேறும் போதும் அவர்கள் உம்மிடம் வரும்போது, “நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம்,” என்று கூறுகின்றார்கள். அவர்கள் மறைக்கும் அனைத்தையும் கடவுள் முழுவதும் அறிந்த வராக இருக்கின்றார்.